Wednesday 20 January 2016

படித்ததில் சிரித்தது


             ( பழமொழிகளில் சிரிக்கவும் சிந்திக்கவும்).


வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும். "

 சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” என்ற பழமொழி உருமாறி "சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று மாறி போயிருக்கிறது. "சும்மாடு” என்பது தலையில் சுமை தாங்க பயன்படும் பொருள்.

 புதிதாக வந்த மருமகள் வீட்டிற்குரிய மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றும் செயலுக்கும், அதற்கு இணையான நிகழ்வுகளுக்கும் எடுத்தாளப்படும் பழமொழியே, "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” என்பதாகும். இதில் பிடாரி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு ஊரின் நடுவே கோயில் அமைக்கப்பட்டு, கொற்றவையும், காளிக்கும் ஊரின் எல்லையில் கோயில் அமைக்கப்பட்டன. அந்த நிகழ்வை குறிக்க உருவான பழமொழியே இது


. மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும் "ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள். "


ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” -பின்னாளில் "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்றும் "

ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று சொன்னதை "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று பொருள் இன்றளவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.


 "கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் பண்டிதன் ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

6 comments:

  1. படித்ததில் சிரித்தது.... நானும் படித்து ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் ஸார். இப்ப உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன். கிடைத்ததா?

    ReplyDelete
  3. பழமொழிகளின் பின்னணியில் உள்ள உண்மைப்பொருள்களை பின்னிப்பின்னிச் சொல்லியுள்ளீர்கள். படித்தேன். மகிழ்ந்தேன். பகிர்வுக்குப் பாராட்டுகள். தகவலுக்கும் அழைப்புக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  5. விளக்கம் மிகவும் அருமை...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    ReplyDelete