Tuesday, 3 May 2016
Friday, 22 April 2016
Saturday, 16 April 2016
Saturday, 9 April 2016
Saturday, 2 April 2016
Saturday, 26 March 2016
Saturday, 19 March 2016
Friday, 11 March 2016
Friday, 4 March 2016
Saturday, 27 February 2016
Saturday, 20 February 2016
Saturday, 13 February 2016
Sunday, 7 February 2016
Friday, 29 January 2016
Monday, 25 January 2016
Wednesday, 20 January 2016
படித்ததில் சிரித்தது
( பழமொழிகளில் சிரிக்கவும் சிந்திக்கவும்).
வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும். "
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” என்ற பழமொழி உருமாறி "சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று மாறி போயிருக்கிறது. "சும்மாடு” என்பது தலையில் சுமை தாங்க பயன்படும் பொருள்.
புதிதாக வந்த மருமகள் வீட்டிற்குரிய மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றும் செயலுக்கும், அதற்கு இணையான நிகழ்வுகளுக்கும் எடுத்தாளப்படும் பழமொழியே, "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” என்பதாகும். இதில் பிடாரி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு ஊரின் நடுவே கோயில் அமைக்கப்பட்டு, கொற்றவையும், காளிக்கும் ஊரின் எல்லையில் கோயில் அமைக்கப்பட்டன. அந்த நிகழ்வை குறிக்க உருவான பழமொழியே இது
. மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும் "ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள். "
ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” -பின்னாளில் "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்றும் "
ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று சொன்னதை "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று பொருள் இன்றளவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.
"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் பண்டிதன் ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
Thursday, 14 January 2016
பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.
வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக்கொண்டாடினர்.[
அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.
Sunday, 10 January 2016
வெற்றி
வெற்றிக்கு ஸ்வஸ்திக் கோலம்! ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக விளங்கும் இதனைப் பூஜையறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு. "ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும். எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.
முதல் வணக்கம்
ஸ்வஸ்திக் சின்னத்தின் மஹத்துவம் என்ன?
நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.
யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை.
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத ||
எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.
இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)