வெற்றிக்கு ஸ்வஸ்திக் கோலம்! ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக விளங்கும் இதனைப் பூஜையறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு. "ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும். எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.
ஆஹா, புதிய பதிவு ஒன்று வெளியிட்டு, வலையுலகில் புதிதாக பிரவேஸம் செய்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDelete>>>>>
இவ்வளவு நாட்கள் வலைப்பதிவு எழுத நினைத்ததே இல்லைதான். உங்க பதிவுல பின்னூட்டம் போடணும் என்றுதான் வலைப்பதிவே ஆரம்பிச்சேன். பிறகுதான் உங்க பதிவுல பின்னூட்டம் போட முடிந்தது.
Delete//ஆஹா, புதிய பதிவு ஒன்று வெளியிட்டு, வலையுலகில் புதிதாக பிரவேஸம் செய்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது.//
Deleteஎன் மேற்படி பின்னூட்டத்தில் ‘செய்துள்ள’ என்றதோர் வார்த்தை ‘செய்துள்ளது’ என இருக்க வேண்டும்.
தயவுசெய்து மாற்றிப்படிக்கவும். அவசரத்தில் அந்தக் கடைசி எழுத்து ‘து’ டைப் அடிக்க விட்டுப்போய் உள்ளது.
- VGK
அதுவும் ’ஸ்வஸ்திக்’ஐ ப்ரொஃபைல் சின்னமாக தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDelete>>>>>
ப்ரொஃபைலில் ஸ்வஸ்திக் சின்னம் வைத்ததாலதான் அதுபற்றிய விஷயங்களை தேடிப்பிடித்து போட்டிருக்கேன்.
Deleteஸ்வஸ்திக் என்பது வெற்றிச்சின்னம் ஆகையால் தாங்கள் எழுத்துலகில் வெற்றியுடன் ஜொலிக்கப்போகிறீர்கள் என்பது இப்போதே உறுதியாகத் தெரிகிறது.
ReplyDelete>>>>>
மிகவும் நன்றிசார். இந்த உங்க ஆசிர்வாதத்தை நான் ரொம்பவே எதிர் பார்த்தேன். கேட்காமலேயே உங்க ஆசிர்வாதம் கிடைத்து விட்டது. மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல தெரியல. உங்க பக்கம் வந்து ஃபாலோவர்ஆனேன். என் பக்கம் அந்த கெட்ஜட் எப்படி கொண்டுவரளதுன்னு தெரியல.
Delete
ReplyDelete//"ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. //அதனால்தான், சுப நிகழ்ச்சிகளான, திருமண அழைப்பிதழ் பத்திரிகை போன்றவைகளில் ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் ..... போன்று வருஷப்பெயர்களுக்கு முன்பு இதனைக் குறிப்பிடுகிறார்கள். ’ஸ்ரீ’ என்றால் லக்ஷ்மி என்றும் லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும் என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
>>>>>
நீங்க சொன்ன விளக்கமும் பொருத்தமாக இருக்கு. நன்றி சார்.
Deleteவிநாயகருக்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்திற்கும், சூரிய வழிபாட்டுக்கும் உகந்த இந்த வெற்றியின் மங்கலச் சின்னமான ஸ்வஸ்திக் கோலம் பற்றி மிக அழகாக, உயர்வாக, ஒஸத்தியாக இங்கு தாங்கள் எடுத்துச்சொல்லியுள்ளது வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் பயன்படக்கூடும்.
ReplyDelete>>>>>
யாராவது இந்த பதிவு பக்கம் வந்து பார்க்கணும்னா நானும் பலரின் பதிவு பக்கமும் போயி பார்க்கணுமே.
Delete//ப்ராப்தம் 11 January 2016 at 00:33
Deleteயாராவது இந்த பதிவு பக்கம் வந்து பார்க்கணும்னா நானும் பலரின் பதிவு பக்கமும் போயி பார்க்கணுமே.//
அதுபோலெல்லாம் தப்புக்கணக்குப் போட்டு பல பதிவர்களின் பதிவுகளுக்கும் போய் FOLLOWER ஆக வேண்டாம்.
இப்போது தாங்கள் FOLLOWER ஆகியிருக்கும்
VAI. GOPALAKRISHNAN, பூ வனம், பூந்தளிர் 3, மணிராஜ் ஆகிய நான்கு மட்டுமே இப்போதைக்குத் தங்களுக்குப் போதும்.
அதுபோல தங்கள் பதிவுப்பக்கம் அவர்களாகவே வருகை தந்து கருத்தளித்துள்ளார்களே என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் பக்கம் ஓடிப்போய் கருத்தளிக்கும் தவறினையும் தயவுசெய்து செய்யாதீர்கள்.
தங்களுக்கு நேரமும் இருந்து, பிறர் பதிவுகளைப் படிக்க ஆர்வமும் இருந்தால், நல்ல தரமான எழுத்தாளர்களின் பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து FOLLOWER ஆகிக்கொள்ளவும்.
சிலர் பொழுதுபோகாமல் எல்லோருடைய பதிவுகளுக்கும், கோயில் மாடு போலச் சுற்றி சுற்றி வந்து, பதிவினைப் படிக்காமலேயே, பதிவுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் ஏனோ தானோவென்று, டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுத்துச் செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்வது, தங்களை அவர்கள் பக்கம் இழுப்பதற்காக மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளவும்.
அதுபோல தாங்கள் வெளியிடும் பதிவுகளும், நல்ல தரமானதாக இருக்க முயற்சி செய்யுங்கள். பதிவுகளின் எண்ணிக்கைகள் குறைவாக இருப்பினும், தரமான எழுத்துக்களே சந்தையில் பிறரால் என்றும் மதிக்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.
அன்புடன் VGK
சரியான நேரத்தில் சரியான அறிஉரை. எப்பவும் இப்படி நல்ல வழிகாட்டணும்சார்.அவங்க பக்கம் ஃபாலோவர் ஆனது உங்க கவனத்துக்கு எப்படி வந்தது. அப்ப உங்களுக்கும் நிறய விஷயங்கள் தெரிந்திருக்கும் தானே. நல்ல பதிவு என்று எப்படி தெரிந்து கொண்டு போகமுடியும். இன்றுதானே ஆரம்பித்திருக்கேன். ப்ளாக் பற்றி எதுவும் தெரியல. சிறந்த பதிவாக சில பதிவுகளை சொல்ல முடியுமா அங்கு போய் பார்க்கிறேன்
Deleteப்ராப்தம் 11 January 2016 at 04:40
Delete//சரியான நேரத்தில் சரியான அறிவுரை. எப்பவும் இப்படி நல்ல வழிகாட்டணும் சார்.// :)
//அவங்க பக்கம் ஃபாலோவர் ஆனது உங்க கவனத்துக்கு எப்படி வந்தது. அப்ப உங்களுக்கும் நிறய விஷயங்கள் தெரிந்திருக்கும் தானே.//
இது ஒன்றும் கம்பச்சித்திர வேலையே அல்ல. உங்கள் வலைப்பதிவின் Right Side Top Corner இல் View my complete profile என்று உள்ளதே. அதை க்ளிக் செய்தால் போதுமே.... நீங்க யார் யாரை Follow செய்கிறீர்கள் என எனக்கு மிகச்சுலபமாகத் தெரிந்துவிடுமே. அதிலிருந்துதான் நான் அந்தத் தகவல்களை எடுத்துக்கொண்டேன்.
//நல்ல பதிவு என்று எப்படி தெரிந்து கொண்டு போகமுடியும். இன்றுதானே ஆரம்பித்திருக்கேன். ப்ளாக் பற்றி எதுவும் தெரியல. சிறந்த பதிவாக சில பதிவுகளை சொல்ல முடியுமா அங்கு போய் பார்க்கிறேன்.//
இதையெல்லாம் என்னால் இங்கு ஓபனாகச் சொல்ல இயலாது. எனக்கு நீங்கள் தனியாக மெயில் அனுப்பினால், அதில் சிலவற்றை பாலிஷ்டாக என்னால் தெரிவிக்க இயலும்.
என் அனுபவத்தில் என் விருப்பு வெறுப்பக்களை கொஞ்சம் உங்களுக்கும் சொல்வேன். அதையெல்லாம் கேட்பதோ கேட்காததோ உங்கள் இஷ்டம் மட்டுமே. ஏனெனில், வாசிப்பதில் உங்கள் டேஸ்டும் என் டேஸ்டும் ஒருவேளை வித்யாசப்படலாம்.
ஸார் ரிஷபன் சார் பக்கமும் ஜெயந்தி ரமணி மேடம் பக்கமும் ஃபாலோவர் ஆக முடியலியே
Delete//ப்ராப்தம் 12 January 2016 at 21:33
Deleteஸார் ரிஷபன் சார் பக்கமும் ஜெயந்தி ரமணி மேடம் பக்கமும் ஃபாலோவர் ஆக முடியலியே//
இதை நான் அவர்கள் இருவரின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு செல்கிறேன்.
தாங்கள் பதிவுலகில் வெற்றி மேல் வெற்றிபெற மீண்டும் என் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன் VGK
உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு. நன்றி. பதிவு போடுவதில் ஏதாவது டவுட் வந்தால் உங்களிடம் கேட்கலாமா?????
Deleteப்ராப்தம் 11 January 2016 at 00:35
Delete//பதிவு போடுவதில் ஏதாவது டவுட் வந்தால் உங்களிடம் கேட்கலாமா?????//
தாராளமாகக் கேட்கலாம். எனக்குத் தெரிந்ததை மட்டும் என்னால் சொல்லித்தர இயலும்.
எனக்கே இதில் பல விஷயங்கள் இன்னும் தெரியாமல்தான் உள்ளன.
நான் இதில் கற்றதே கைமண் அளவு மட்டுமே என சொல்லிக்கொள்கிறேன். இதில் நான் கல்லாதது உலகளவு இருக்கக்கூடும். - VGK
ஓ. கே. உடனடியாக ரிப்ளை பண்ணியதற்கு நன்றிகள் ஃபாலோவர் கெட்ஜெட் பத்தி யாருகிட்ட கேட்டா சொல்லி தருவாங்க. நீங்க எப்படி அதை சேர்த்தீங்க.
ReplyDeleteப்ராப்தம் 11 January 2016 at 04:30
Delete//ஃபாலோவர் கெட்ஜெட் பத்தி யாருகிட்ட கேட்டா சொல்லி தருவாங்க. நீங்க எப்படி அதை சேர்த்தீங்க.//
நான் பதிவுகள் எழுதி, படங்களை இணைத்து, பிறரின் பின்னூட்டங்கள் கிடைத்தால் பப்ளிஷ் செய்து, பல நேரங்களில் அவர்களுக்கு என் பதில்களை எழுதி வெளியிடுவதோடு சரி. வேறொன்றும் உட்புகுந்து செய்வதோ, செய்ததோ இதுவரை கிடையாது.
எனக்கு என் வீட்டுக்கே வருகை தந்து புதிதாக ப்ளாக் ஓபன் செய்துகொடுத்து உதவியவர் திரு. ரிஷபன் ஸ்ரீனிவாசன் என்ற என் எழுத்துலக மானஸீக குருநாதர் ஒருவர். அவரின் வலைத்தளம்: rishaban57.blogspot.com
என் ஆரம்பகால அந்த அனுபவங்களைப் பற்றி, நான் எழுதியுள்ள நகைச்சுவைப் பதிவுனை இதோ இந்த இணைப்பினில் படிக்கவும். (அது என் 50வது பதிவு)
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
அதன்பிறகு வேறொரு நாள் என் வீட்டுக்கே வந்து அதில் பல்வேறு மாற்றங்கள் செய்து கொடுத்து உதவியவர் திரு. வெங்கட் நாகராஜ் என்பவர். அவரின் வலைத்தளம்:
http://venkatnagaraj.blogspot.com/
இதுபோல உங்கள் ஊரில் உள்ள EXPERT ஆன அனுபவம் வாய்ந்த + தொழில்நுட்பம் தெரிந்த BLOGGER யாராவது இருந்தால் அவர்களை அழைத்துக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
தகவல் களுக்கு நன்றிசார். நீங்க சொல்லி இருக்கும் ரெண்டு பதிவர்கள்பக்கம் சென்று ஃபாலோவர் ஆகலாமா?
ReplyDelete//ப்ராப்தம் 11 January 2016 at 21:32
Deleteதகவல் களுக்கு நன்றிசார். நீங்க சொல்லி இருக்கும் ரெண்டு பதிவர்கள்பக்கம் சென்று ஃபாலோவர் ஆகலாமா?//
தாராளமாக ஆகலாம். இருவரும் மிகப் பிரபலமான பதிவர்களே. தரமான பதிவுகளாகத் தருபவர்களே.
திரு. வெங்கட் நாகராஜ் ஜி இன்று தன்னுடைய ஆயிரமாவது பதிவினை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். அதற்கான இணைப்பு:
http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-post_12.html
என்ன சார் 5- வருடங்களாக பதிவுகள் எழுதி வறீங்க. ஏதுமே தெரியாதுன்னு சொன்னா எப்படிங்க? எனக்கு ஏதும் சொல்லித்தருவதில் சங்கடமாக ஃபீல் பண்ணுறீங்களா?
ReplyDelete//ப்ராப்தம் 11 January 2016 at 21:35
Deleteஎன்ன சார் 5- வருடங்களாக பதிவுகள் எழுதி வறீங்க. ஏதுமே தெரியாதுன்னு சொன்னா எப்படிங்க? எனக்கு ஏதும் சொல்லித்தருவதில் சங்கடமாக ஃபீல் பண்ணுறீங்களா?//
எனக்குத்தெரிந்தவற்றை பிறருக்குப் புரியும்படியாகச் சொல்லித்தருவதில் எனக்கு எப்போதும் எந்த சங்கடங்களும் கிடையவே கிடையாது. அதில் எனக்கு மகிழ்ச்சி மட்டுமே.
வலையுலகுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை நான் BLOGGER இல் உட்புகுந்து ஏதும் நானாகவே செய்தது இல்லை என்பதே இதில் உள்ள உண்மை.
நான் நானாகவே அதில் ஏதாவது செய்யப்போய் உள்ளதும் போய் விடுமோ என்ற அச்சம் மட்டுமே காரணமாகும் என்பதைப் புரிந்துகொள்ளவும்.
என்ன சார் 5- வருடங்களாக பதிவுகள் எழுதி வறீங்க. ஏதுமே தெரியாதுன்னு சொன்னா எப்படிங்க? எனக்கு ஏதும் சொல்லித்தருவதில் சங்கடமாக ஃபீல் பண்ணுறீங்களா?
ReplyDeleteதகவல் களுக்கு நன்றிசார். நீங்க சொல்லி இருக்கும் ரெண்டு பதிவர்கள்பக்கம் சென்று ஃபாலோவர் ஆகலாமா?
ReplyDeleteவலைப்பூ ஆரம்பித்த புதிது என்பதால் சில சந்தேகங்கள் வரலாம். தவறில்லை. Followers Gadget/Follow by e-mail வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=72sDe5OMHmE
வெங்கட் சார் வருகைக்கும் கருத்துக்கும் சந்தோஷம் நன்றி. நீங்க அனுப்பி இருக்கும் லிங்க் இங்க க்ளிக் பண்ணினா ஓபனாகுதில்லியே
ReplyDeleteவணக்கம். உங்கள் பதிவு பார்த்து மகிழ்ச்சி. நல்வரவு..
ReplyDeleteஉங்கள் ப்லாக்கும் என்னால் ஃபாலோ செய்ய முடியவில்லை. செட்டிங்க்ஸில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமோ..
ரிஷபன் சார் வணக்கம். நான் மொபைல் ல நெட் யூஸ் பண்றேன். என் பக்கம் ஃப்ஃஃலோவெர் கெட்ஜெட் எப்படி சேர்க்கணும். அப்புரம் காப்பி பேஸ்ட் ஸேவ் ஆப்ஷன் எல்லாம் மொபைல் ல இருக்கா இருந்தா எங்க இருக்கு எப்படி பண்ணனும்? இங்க ஃபாலோவர் கெட்ஜெட் இருந்தா தானே நீங்க ஃபாலோவர் ஆகமுடியும் இல்லியா? ஹெல்ப் பண்ண முடியுமா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
ReplyDelete